எகிப்தில் காஸா மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படைமருத்துவக் குழு

எகிப்தில் காஸா மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சிங்கப்பூர் ஆயுதப் படைமருத்துவக் குழு

1 mins read
7bbacc62-0c4b-470a-970b-1cf307ad1614
சிங்கப்பூர் ஆயுதப் படையின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த இருவரும் , காஸாவிலிருந்து வந்த பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளார்கள். - படம்: தற்காப்பு அமைச்சு

அவசர மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற லெப்டினன்ட் கர்னல் (டாக்டர்) நஜிருல் ஹன்னன் அப்துல் அஜிசும் அறுவை சிகிச்சை தாதியரான ராணுவ நிபுணர் 3 ஜிம்மி வூ யிங் மிங்கும், வியாழக்கிழமை (ஜனவரி 18) எகிப்துக்குப் புறப்பட்டனர்.

சிங்கப்பூர் ஆயுதப் படை மருத்துவக் குழுவைச் சேர்ந்த இருவரும், காஸாவிலிருந்து எகிப்து சென்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளார்கள் என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு திங்கட்கிழமை (ஜனவரி 22) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அவர்கள் நவீன மருத்துவமனை வசதிகள் கொண்ட எகிப்தின் எல் அரிஷ் துறைமுகத்தில் உள்ள பிரெஞ்சுக் கப்பலில் மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றனர்.

காஸாவுக்கு மனிதாபிமான உதவி அளிப்பதற்கு கிடைத்த வாய்ப்பிற்காக இருவரும் நன்றி தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்