அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பெண்களுக்காக வண்ணமயமான மணல் சிற்பத்தை செய்து அசத்தியுள்ளார்.
'ஜாய் ஆப் கலர்' என்னும் கருப்பொருள் மூலம் சுதர்சன் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
7 அடி உயரம் கொண்ட அந்த மணல் சிற்பம்
ஒடிசாவின் பூரி கடற்கரையில் அமைந்துள்ளது.
பண்டிகை நாள்களிலும் நாட்டிற்காக அயராது உழைக்கும் மகளிரை போற்றும் வகையில் அந்த மணல் சிற்பம் உள்ளது.
இந்தியாவில் ஹோலி பண்டிகையும் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது, அதனால் மணல் சிற்பத்திற்கு வண்ணங்களால் அழகு சேர்த்துள்ளார் அவர்.
மணல் சிற்பத்திற்கு கிட்டத்தட்ட 8 டன் மணல் பயன்படுத்தப்பட்டது. சுதர்சனுக்கு அவரது மாணவர்கள் உதவி செய்ததாகத் தெரிவித்தார்.