பாரிஸ்: பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரோன், சவூதி அரேபியப் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) வரவேற்றுள்ளார்.
இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பட்டத்து இளவரசர் சல்மான், மின்விளையாட்டுகள் முதல் மத்திய கிழக்குப் போர்வரை அதிபர் மெக்ரோனுடன் கலந்துரையாடவிருக்கிறார்.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24), சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி ஆகிய பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்படும் என்று பிரெஞ்சு அதிபர் அலுவலகம் குறிப்பிட்டது.
பாரிஸ் ஏற்று நடத்தும் மின்விளையாட்டுகளுக்கான உலகக் கிண்ணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் அதிபர் மெக்ரோனுடன் பட்டத்து இளவரசர் சல்மான் கலந்துகொள்ளவிருக்கிறார்.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி ஆகஸ்ட் 24, பின்னிரவு 2 மணி) நிகழ்ச்சி தொடங்கும்.
கணினி விளையாட்டுகள் தொடங்கி சதுரங்கம் வரையிலான மின்விளையாட்டுகளுக்குப் பட்டத்து இளவரசர் சல்மான் வலுவான ஆதரவளித்துவருகிறார்.
சவூதி அரேபியாவில் வழக்கமாக நடைபெறும் நிறைவு நிகழ்ச்சி, முதன்முறையாக வெளிநாட்டில் இடம்பெறுகிறது.
ஆகஸ்ட் 24ஆம் தேதி, பிற்பகல்வாக்கில் பட்டத்து இளவரசர் சல்மானும் அதிபர் மெக்ரோனும் சவூதி- பிரான்ஸ் உத்திபூர்வ பங்காளித்து மன்றத்தின் முதல் கூட்டத்தை நடத்தவிருக்கின்றனர்.
நிலைத்தன்மை, அமைதி ஆகியவற்றை வலுப்படுத்த பிரான்சும் வளைகுடா பங்காளி நாடுகளும் முக்கிய வட்டார விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் பேசுவர் என்று அதிபர் அலுவலகம் குறிப்பிட்டது.
அதில் மனித உரிமைகள் குறித்துப் பேசப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
2018ஆம் ஆண்டு ரியாத்தில் உள்ள இஸ்தான்புல் துணைத் தூதரகத்தில் சவூதி செய்தியாளர் ஜமால் காஷோகி கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.
காஷோகியின் மரணம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் சவூதி அரேபியா அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் விசாரணை முடிவுகள் குறிப்பிட்டன.
காஷோகியின் கொலைக்கு இட்டுச்சென்ற நடவடிக்கைகளுக்குப் பட்டத்து இளவரசர் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அதையடுத்து 2021ஆம் ஆண்டு காஷோகியின் கொலை குறித்து பட்டத்து இளவரசரைச் சந்தித்த முதல் மேற்கத்திய தலைவராக மெக்ரோன் இருந்தார்.


