ரியாத்: வட்டார அமைதிக்கு நிபந்தனையாக, பாலஸ்தீன ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் தன் படைகளை மீட்டுக்கொள்ள வேண்டும் என முஸ்லிம், அரபு நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போரால் சிதைந்துள்ள காஸாவில் ‘அதிர்ச்சி தரும்’ இஸ்ரேலின் குற்றங்களை அவர்கள் கண்டித்துள்ளனர்.
சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 11) நடந்த முஸ்லிம், அரபு நாட்டுத் தலைவர்களின் உச்சநிலைச் சந்திப்பு, மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள பதற்றம் குறித்து ஓரணியாக குரல்கொடுக்க தலைவர்களுக்கு வாய்ப்பளித்தது.
இஸ்ரேலின் மிகப்பெரிய நட்பு நாடான அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டோனல்ட் டிரம்ப் வாகை சூடி ஒருவாரம் ஆகியுள்ள வேளையில், சவூதி ஏற்று நடத்திய இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

