கோலாலம்பூர்: இணையச் சூதாட்டத்தில் ஈடுபட்டதோடு அழைப்பு நிலையத்தையும் நடத்திய மோசடிக் கும்பலை மலேசிய அரசுக் காவல்துறை முடக்கியுள்ளது.
தலைநகர் கோலாலம்பூரைச் சுற்றி மேற்கொங்ளளப்பட்ட டாடு காஸ் என்ற முறியடிப்பு நடவடிக்கையில் 74 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டனர். வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவுடன் (சிசிஐடி) சேர்ந்து எட்டுக் கட்டுமானப் பகுதிகளில் ஒரேநேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயக்குநர் எம். குமார் தெரிவித்தார்.
20லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட 67 ஆண்களும் ஏழு பெண்களும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார. அவர்களில் 61 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் 12 பேர் வியட்னாமியர்கள் என்பதும் ஒருவர் தைவானியர் என்பதும் முதற்கட்ட அடையாளச் சோதனைகளில் தெரியவந்ததாகவும் திரு குமார் குறிப்பிட்டார்.
