ஹாங்காங்கிலுருந்து மக்காவ் சென்ற பேருந்தில் மூட்டைப்பூச்சித் தொல்லை

ஹாங்காங்கிலுருந்து மக்காவ் சென்ற பேருந்தில் மூட்டைப்பூச்சித் தொல்லை

1 mins read
dfd553fe-42ec-4b07-801a-d38db162847f
பேருந்தில் பயணிகளைக் கடித்தது மட்டுமன்றி அவர்களின் காலணிகளிலும் ஆடைகளிலும் அதிகமான மூட்டைப்பூச்சிகள் காணப்பட்டன. - படம்: மோக்சா பேர்ட்/ஃபேஸ்புக்

ஹாங்காங்: ஹாங்காங்கிலிருந்து மக்காவ் நகருக்குச் சென்ற பேருந்தில் மூட்டைப்பூச்சிகள் காணப்பட்டன.

உலக அளவில் மூட்டைப்பூச்சித் தொல்லை அதிகரித்துவரும் நிலையில், ஹாங்காங்கில் கடந்த நவம்பரில் உள்ளூர் பொதுப் போக்குவரத்தில் முதல்முறையாக அவை கண்டறியப்பட்டன.

டிசம்பர் 12ஆம் தேதி இரவு 11.55 மணியளவில் ஹாங்காங்கிலிருந்து மக்காவ் நகருக்குச் சென்ற ஈரடுக்குப் பேருந்தில் மூட்டைப்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹாங்காங்-ஜுஹாய்-மக்காவ் ஆகிய இடங்களை இணைக்கும் இடைவழிப் பேருந்துச் சேவையின் இணையத்தளத்தில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இது குறித்து ஃபேஸ்புக் பயனர் மோக்சா பேர்ட் என்பவர் வெளியிட்ட பதிவில், தன்னையும் தன் மனைவியையும்மூட்டைப்பூச்சிகள் கடித்தன என்றும் தங்களது 45 நிமிடப் பயணத்திற்குப் பிறகு தம் கணவரின் ஆடைகளிலும் தங்களது காலணிகளிலும் 10க்கும் மேற்பட்ட மூட்டைப்பூச்சிகளைக் கண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“இது ஒரு பயங்கரமான அனுபவம். மூட்டைப்பூச்சி ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவில் இருந்தது. நான் அவற்றை என் நகங்களால் நசுக்கிக் கொன்றேன்,” என அவர் கூறினார்.

இது குறித்து திரு மோக்சா பேர்ட் கூறும்போது, காரில் ஏறுவதற்குமுன் ஆடைகளையும் காலணிகளையும் தூக்கி எறிந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்