புகைமூட்டம் காரணமாக சரவாக் பள்ளிகளுக்கு விடுமுறை

புகைமூட்டம் காரணமாக சரவாக் பள்ளிகளுக்கு விடுமுறை

வீட்டிலிருந்து பாடம் கற்பது செயல்படுத்தப்பட்டது
படம்: த போர்னியோ போஸ்ட்

20 Aug 2026 - 4:26 pm

1 mins read

கூச்சிங்: காற்றின் தரத்தைப் பாதிக்கும் புகைமூட்டம் காரணமாக சரவாக் கல்வித் துறையின் மேற்பார்வையின் கீழ் உள்ள கூச்சிங், படவான், செரியான், சமரஹான் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை ஆகஸ்ட் 20, 21ஆம் தேதிகளில் உடனடியாக மூடுமாறு அத்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித் துறையின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாணவர்கள், பள்ளிச் சமூகங்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம், நல்வாழ்வைப் பாதுகாப்பதற்காக, குறிப்பாக ஆரோக்கியமற்ற காற்றின் தன்மையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில் மாணவர்களின் கற்றல் தொடர்வதை உறுதி செய்வதற்காக, வீட்டிலிருந்தே கற்பித்தல் மற்றும் பாடம் கற்பது செயல்படுத்தப்படும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடப்பட்ட காலம், மீண்டும் திறப்பது தொடர்பான மேலதிக தகவல்கள், அதன் அதிகாரபூர்வ வழிகள், அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) நண்பகல் 12 மணி நிலவரப்படி, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் வாரியத்தின் தினசரி புகைமூட்டக் கண்காணிப்பு, செரியான் (191), கூச்சிங் (188), சமரஹான் (171) ஆகிய இடங்களில் ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு அளவுகளைப் பதிவு செய்துள்ளது என்று த போர்னியோ போஸ்ட் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
புகைமூட்டம்சரவாக்ஃபேஸ்புக்சுற்றுச்சூழல்