பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கோலாலம்பூரிலும் வேறு ஐந்து மாநிலங்களிலும் திங்கட்கிழமை (அக்டோபர் 19) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
மலேசிய கல்வி அமைச்சின்கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு இது பொருந்தும். புகைமூட்டத்தால் ஏற்பட்ட இடையூறு காரணமாகப் பள்ளிகள் முடப்பட்டிருந்தன.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பாகாங், பினாங்கு ஆகியவை சம்பந்தப்பட்ட ஐந்து மாநிலங்களாகும்.
