மோப்பம் பிடிக்கும் எந்திரன்!

1 mins read
feca831b-2447-4d9b-8061-d38122aac0d6
வெட்டுக்கிளியின் உணர்கொம்புகள் போன்ற உணர்கருவி 'மோப்ப' எந்திரனில் பொருத்தப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

வெட்டுக்கிளியின் உணர்கொம்புகளைப் போன்ற உணர்கருவியை இயந்திர மனிதனில் பொருத்தி, அதற்கு மோப்பம் பிடிக்கும் திறனைக் கொடுத்துள்ளனர் இஸ்ரேலிய விஞ்ஞானிகள்.

இந்த புதிய எந்திரன், முன்கூட்டியே நோயைக் கண்டறிவது, பாதுகாப்புச் சோதனைகளை மேம்படுத்துவது போன்றவற்றுக்கு உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் கட்டமைப்புகளுடன் இந்த நான்கு சக்கர எந்திரன் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்தத் தொழில்நுட்பங்கள், எந்திரனுக்கு மோப்ப சக்தியைக் கற்றுக்கொடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

வெட்டுக்கிளியின் உணர்கொம்புகளுக்கு அதிக மோப்ப சக்தி உள்ளதால் அதுபோன்ற வடிவிலேயே எந்திரனுக்கும் உணர்கருவிகளை அமைத்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.