அமெரிக்காவின் சியேட்டல் நகரம் சாதிய பாகுபாட்டிற்குத் தடைவிதித்துள்ளது.
அமெரிக்காவில் சாதிய பாகுபாட்டிற்குத் தடைவிதித்த முதல் நகரமும் அதுவே.
அந்நகரின் மன்றத்தில் செவ்வாய்கிழமை வாக்குகள் எடுக்கப்பட்டு புதிய சட்டம் இயற்றப்பட்டது.
சட்டம் இயற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் தென் ஆசிய வம்சாவளிகள் குறிப்பாக இந்திய மற்றும் இந்து சமூகத்தினரால் பிரச்சினைகள்ஏற்படுவதே என தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் அமெரிக்க வேலை இடங்களில் குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் சாதிய பாகுபாடுகள் உள்ளதாக சில புகார்கள் எழுந்தன.
அதைத்தொடர்ந்து சியேட்டல் நகரம் புதிய விதியை அமல்படுத்தியது.

