அசாத் அரண்மனையுடன் இணைக்கப்பட்ட ரகசிய சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு

1 mins read
c407c5a1-ad02-4115-9dc1-256197772d9a
ஏராளமான சுரங்கப் பாதைகளில் இதுவும் ஒன்று. - படம்: ஏஎஃப்பி

டமாஸ்கஸ்: சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தின் அரண்மனையுடன் இணைக்கப்பட்ட ரகசிய சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைநகரைப் பாதுகாக்கும் வகையில் ராணுவ வளாகத்துடனும் அரண்மனையுடனும் இணைக்கப்பட்ட அந்தப் பாதை காஸ்யூன் மலைச் சரிவில் அமைந்துள்ளது.

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி கிளர்ச்சிக்காரர்கள் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்த பிறகு ரகசிய சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

“டமாஸ்கஸ் விடுதலையான பிறகு நாங்கள் குடியரசுக் காவலர்களின் இந்த சுரங்கப் பாதைக்குள் நுழைந்தோம். அசாத் மாஸ்கோவுக்குத் தப்பியோடி விட்டார்,” என்று அசாத்தை வீழ்த்திய கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய இஸ்லாமிய அமைப்பான ஹயாட் தஹ்ரிர் அல்-ஷாமினின் ராணுவ அதிகாரி முஹமட் அபு சலீம் தெரிவித்தார்.

“அதிபர் மாளிகைக்கு இட்டுச்செல்லும் பரந்த அளவிலான சுரங்கப் பாதைக் கட்டமைப்பை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்” என்றார் அவர்.

இந்த காஸ்யூன் மலையிலிருந்துதான் தலைநகரின் வாயில்களில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை பல ஆண்டுகளாக பீரங்கிப் படைகள் தாக்கிவந்தன.

குறிப்புச் சொற்கள்