மகாதீருக்கு 100வது பிறந்தநாள் வாழ்த்து கூறிய மூத்த அமைச்சர் லீ

2 mins read
82a7ea63-9bfb-4e22-89cd-ee24b09ab6d5
சிங்கப்பூரின் இருநூறாவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, தேசிய தின அணிவகுப்பு 2019ல் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட டாக்டர் மகாதீர், அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா ஆகியோருடன் மூத்த அமைச்சர் லீ சியன் லூங், திருமதி லீ. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

மலேசியாவின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்த டாக்டர் மகாதீர் முகம்மதுக்கு ஜூலை 10ஆம் தேதி 100 வயது.

மலேசியர்களிடமிருந்தும், பல நாட்டுத் தலைவர்களிடமிருந்தும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மூத்த அமைச்சர் லீ சியன் லூங், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் டாக்டர் மகாதீருக்கு 100வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விரைவில் தமது 99வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் டாக்டர் மகாதீரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மாவுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

“மலேசியாவை இன்றைய நிலைக்கு அதாவது நவீன, உலகளவில் இணைக்கப்பட்ட வெற்றிகரமான நாடாக வடிவமைத்த ஒரு முன்னோடித் தலைவர் டாக்டர் மகாதிர். வட்டார ரீதியாக, அவர் ஆசியானின் ஒற்றுமையை ஆதரித்தார். ஒன்றாக இருப்பதன் மூலம் மட்டுமே நாம் கடினமாகப் பெற்ற சுதந்திரத்தைப் பராமரிக்கவும் பயனடையவும் முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவரது பல்லாண்டு கால பொதுச் சேவை மலேசியாவிற்கும் ஆசியானுக்கும் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று திரு லீ தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

2018 தேர்தலில் பக்காத்தான் ஹரப்பானின் அதிர்ச்சியூட்டும் வெற்றிக்குப் பிறகு, பாரிசான் நேஷனல் கூட்டணியின் நீண்டகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், மகாதிர் மீண்டும் பிரதமரான போது மலேசியாவின் மற்றும் உலகின் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றார்.

மகாதிர் அரசியல் மற்றும் சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். அனைத்துலகப் பயணங்களை மேற்கொள்கிறார். மலேசிய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்த தனது எண்ணங்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறார்.

இன்றும் டாக்டர் மகாதீர், தனது காரை தானே ஓட்டிச் செல்கிறார்.

குறிப்புச் சொற்கள்