கோலாலம்பூர்: பட்டாசுகள் மற்றும் வாணவெடிகள் தொடர்பான குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரையிலான சிறையும் 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படும் என மலேசியக் காவல்துறைத் தலைவர் காலிட் இஸ்மாயில் மீண்டும் எச்சரித்துள்ளார்.
உயிர் அல்லது பொருள் சேதம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தான பட்டாசுகள் வைத்திருப்பதும், தயாரிப்பதும் 1957ஆம் ஆண்டு வெடிப்பொருள்கள் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றார் அவர்.
2025 தடைச் செய்யப்பட்ட வெடிப்பொருள்கள் அறிக்கையின்படி அங்கீகரிக்கப்பட்ட 45 வகை பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன; ‘பாப் ஆப்’, ‘ஹேப்பி பூம்’ போன்றவை அதில் அடங்கும்.
ஆனால் அவற்றை விற்க உள்ளூர் காவல்துறையின் அனுமதி தேவை என்றும் திரு காலிட் நினைவுறுத்தினார்.
எனவே, இந்தச் சீனப் பெருநாளைப் பாதுகாப்பாக கொண்டாடுமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.
சட்டத்தை மீறினால், கொண்டாட்டம் தண்டனையாக மாறும் என்றார் அவர்.

