நியூயார்க்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் கடுங் குளிர் நிலவுகிறது.
இதனால் மரத்தில் வாழும் ஓணான்கள் குளிர் தாங்க முடியாமல் செத்து மடிகின்றன.
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) ஓணான்கள் மரத்திலிருந்து கீழே விழும் காட்சிகளை அந்த மாநிலத்தின் தொலைக்காட்சிகள் காட்டின.
ஃபுளோரிடாவின் தென்பகுதியில் உள்ள சாலைகளில் ஓணான்கள் மடிந்து கிடக்கும் காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
“200 கிலோகிராம் எடைக்கு மேலான ஓணான்களை சேகரித்துள்ளேன். அவற்றில் சில உயிருடன் உள்ளன,” என்று ஓணான்களை அகற்றும் நிறுவனத்தை நடத்தும் ஜெஸிகா கில்கோர் தெரிவித்தார்.
இன்னும் சில நாள்களுக்கு அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மோசமான வானிலை இருக்கும் என்பதால் ஓணான்களின் இறப்பும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

