சீனாவின் ஷாங்காய் நகரில் வாழும் ஒரு பெண் தமக்கு அடக்கமான பணிப்பெண் வேண்டும் என்றும் மாதம் கிட்டத்தட்ட 27,000 வெள்ளி சம்பளம் தர தயார் என்றும் விளம்பரம் செய்துள்ளார்.
அது அந்நாட்டின் சமூக ஊடகங்களில் கடந்த சில நாள்களாக பேசும் பொருளாக மாறியுள்ளது.
பணிப்பெண் பழங்காலங்களில் ராணிகளுக்கு வேலை செய்வது போல் தமக்கு வேலை செய்ய வேண்டும், உடை மாற்றிவிடுவது, அலங்கரிப்பது போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதுபோன்ற வேலைகள் செய்ய தன்மானம் சற்று குறைவாக இருக்க வேண்டும் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.
பணிப்பெண் 165 செண்டிமீட்டருக்கு மேல் உயரமாகவும் 55 கிலோ கிராம் எடைக்கு கீழும் இருக்க வேண்டுமாம்.
படிப்பு உயர்நிலை பள்ளிக்கு மேல் இருக்க வேண்டுமாம், அழகான முகம், பாடல் ஆடல் தெரிந்திருக்க வேண்டுமாம்.
விளம்பரம் கொடுத்த நபர் ஏற்கெனவே இரண்டு பணிப்பெண்களை வேலைக்கு வைத்துள்ளார். அவர்களுக்கும் அவர் 26,000 வெள்ளி சம்பளம் தருகிறார்.
விளம்பரத்தைக் கண்ட பலர் அந்த வேலைக்கு செல்ல கடிதங்களை அனுப்பியுள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.