டர்க்ஸ் அண்ட கைகோஸ்: கெரிபியன் பகுதியில் உள்ள டர்க்ஸ் அண்ட கைகோஸ் தீவின் கடற்பகுதியில் சுற்றுப்பயணி ஒருவர் சுறாமீனுடன் படம் எடுத்துக்கொள்ள முயன்றார்.
அப்போது அந்தப் பெண்ணை அச்சுறாமீன் கடித்தது.
பிப்ரவரி 7ஆம் தேதி கடற்கரைக்கு அருகில், அவ்வளவு ஆழமில்லாக் கடற்பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
காயமடைந்த அப்பெண் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிகிச்சைக்குப் பிறகு அவர் தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாக தீவைச் சேர்ந்த அதிகாரிகள் கூறினர்.
பெண்ணைக் கடித்த சுறாமீன் 1.8 மீட்டர் நீளமுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அது எந்த வகை சுறாமீன் என்பதை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
இந்தச் சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து, அந்தக் கடற்கரை மூடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பெண்ணைக் கடித்த சுறாமீன் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டதை அதிகாரிகள் உறுதி செய்த பிறகு பிப்ரவரி 9ஆம் தேதி கடற்கரை மீண்டும் திறக்கப்பட்டது.