2006ஆம் ஆண்டில் யெட்டி ஏர்லைன்ஸ் விமானம் நேப்பாளத்தில் விழுந்து நொறுங்கியது. விபத்தில் அதன் விமானி தீபக் பொக்ரேல் மாண்டார்.
நான்கு ஆண்டுகள் கழித்து, அவருடைய மனைவி திருவாட்டி அஞ்சு கட்டிவாடா (படம்) நேப்பாளத்தின் உள்நாட்டு விமானச் சேவையான அதே யெட்டி ஏர்லைன்சில் விமானியாகச் சேர்ந்தார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 15) நடுவானில் வெடித்துச் சிதறி விழுந்து நொறுங்கிய விமானத்தின் விமானி இவரே. கணவர் இறந்து 16 ஆண்டுகள் கழித்து, அவரைப் போலவே நேப்பாளத்தில் நிகழ்ந்த யெட்டி ஏர்லைன்ஸ் விமான விபத்தில் திருவாட்டி கட்டிவாடாவும் உயிரிழந்துவிட்டார்.
கணவர் இறந்ததை அடுத்து, தமக்குக் கிடைத்த காப்புறுதிப் பணத்தைக் கொண்டு அவர் விமானத்தை இயக்கக் கற்றுக்கொண்டு விமானியானதாகத் தெரிவிக்கப்பட்டது.

