தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த காவல்துறை அதிகாரி

1 mins read
1660f5ff-90f5-42c8-bc26-857facc939e6
படம்: டுவிட்டர் -

அமெரிக்காவில் விரைவுச்சாலை ஒன்றில் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்து உதவியுள்ளார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

அதிகாரி பிரசவம் பார்த்ததை அவர் உடலில் பொருத்தியிருந்த படபிடிப்புக் கருவிகள் பதிவுசெய்திருந்தன.

இந்நிகழ்வு ஃபுளோரிடாவில் ஏப்ரல் 30ஆம் தேதி நடந்தது.

காரில் கர்ப்பிணியும் அவரது கணவரும் சென்றுகொண்டிருந்த போது பெண்ணிற்கு திடீரென வலி எடுத்தது. அதைத்தொடர்ந்து பெண்ணின் கணவர் அவசர உதவிக்கு எண்ணுக்கு அழைத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த டேனியல் ஜோன்ஸ் என்னும் அதிகாரி மேலும் சில உதவிகள் கேட்டு மற்ற பிரிவு அதிகாரிகளையும் அழைத்தார்.

பிரசவ வலியில் துடித்த பெண்ணைக் கண்ட அதிகாரி களத்தில் இறங்கி தாமே பிரசவம் பார்க்கத் தொடங்கினார். இறுதியில் தாயையும் சேயையும் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் காப்பாற்றினார்.

தம்பதிக்கு இது ஆறாவது குழந்தையாம்.

ஜோன்ஸ் விரைவுச்சாலையில் இதுவரை மூன்று முறை பிரசவம் பார்த்து உதவியுள்ளாராம்.

அதிகாரியின் உதவியைப் பாராட்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்