தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உணவகத்தில் இருந்து வாங்கி வந்த உணவில் தவளை

1 mins read
78de6caf-88ab-4ce8-ae0b-13d1bde4cdc5
படம்: டுவிட்டர் -

பிடித்தமான உணவை பிரபலமான உணவுக்கடையில் இருந்து வாங்கி வந்த ஆடவருக்குப் பெரும் அதிர்ச்சி.

கிட்டத்தட்ட உணவை உண்டு முடிக்கவிருந்த நிலையில் ஆடவர் உயிருடன் இருந்த பச்சை தவளையை உணவுக் குவளைக்குள் கண்டு அதிர்ந்தார்.

இச்சம்பவம் ஜப்பானில் நடந்தது. அந்த ஆடவர் அது தொடர்பான காணொளியையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

காணொளியில் உணவுக் குவளைக்குள் தவளை இருப்பது தெளிவாகப் பதிவாகியிருந்தது.

மருகேம் செய்மன் என்னும் பிரபல உணவகத்தில் ஒரு குவளை சேக் உடோன் உணவை அந்த ஆடவர் வாங்கினார்.

சேக் உடோன் என்பது இறைச்சிகளை பொடிப்பொடியாக நறுக்கி நூடல்ஸ் சூப்வகை போல் வதக்கப்படும்.

பிடித்த உணவு என்பதால் வேகவேகமாக உண்ட அந்த ஆடவர், இறுதியில் பச்சை நிறத்தில் தவளை இருந்தது கண்டு அதிர்ந்தார்.

அதன் பின்னர் சமூக ஊடகத்தில் தமது அனுபவத்தைப் பகிர்ந்தார்.

இதற்காக அந்த ஆடவரிடம் உணவகம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்