பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் முகஞ்சுளிக்க வைத்த ஆடவரின் செயல்!

பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் முகஞ்சுளிக்க வைத்த ஆடவரின் செயல்!

1 mins read
குப்பைத் தொட்டியே கழிப்பறையானது! (காணொளி)
6737393c-827c-4414-9cf5-a00f018d7b58
குப்பைத் தொட்டியைக் கழிப்பறையாகப் பயன்படுத்திக்கொண்ட ஆடவர். - காணொளிப்படம்: எக்ஸ் / ரேடியோஜெனோவா

நியூயார்க்: நவீன தொழில்நுட்ப வளர்ச்சிமிக்க, தூய்மையான சாலைகளைக் கொண்ட நாடு அமெரிக்கா என்பதே வெளிநாட்டினர் பலரது எண்ணமாக இருந்து வருகிறது.

ஆனால், சமூக ஊடகங்கள் அதன் இன்னொரு பக்கத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகின்றன.

அப்படியொரு காணொளி ‘எக்ஸ்’ (முன்னர் டுவிட்டர்) ஊடகத்தில் பகிரப்பட்டு வருகிறது.

நியூயார்க் நகரில் பட்டப்பகலில் பரபரப்பான சாலையோரத்தில் குப்பைத்தொட்டி மீதமர்ந்து மலம் கழிப்பதை அக்காணொளி காட்டுகிறது.

இதற்கு இணையவாசிகள் பலவிதமாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

‘அருவருக்கத்தக்க செயல்’ என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். ‘சாலை நடுவே மலங்கழிக்காமல் அதற்குக் குப்பைத் தொட்டியைப் பயன்படுத்திக்கொண்டாரே என்று நிம்மதி அடையுங்கள்’ என்று வேறு சிலர் கருத்துரைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்