தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் பாருவில் காவல்துறையுடன் துப்பாக்கிச்சூடு: ஆடவர் மரணம்

1 mins read
061c5d43-2571-44f4-b3f0-4cafb17360e9
கோப்புப் படம்: - இணையம்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் காவல்துறையுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குற்றப் பின்னணிகொண்ட 63 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார் என்று ஜோகூர் காவல்துறை ஆணையர் எம்.குமார் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் சனிக்கிழமை (மார்ச் 8) அதிகாலை 3.10 மணியளவில் ஜோகூர் பாருவின் தாமான் மொலெக் வட்டாரத்தில் நேர்ந்தது. சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிக்சூடு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் திரு குமார் தெரிவித்தார்.

“மாநிலக் காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவைச் (D9) சேர்ந்த குழு இரு காவல்துறை வாகனங்களில் சுற்றுக்காவலில் ஈடுபட்டபோது சம்பவம் நிகழ்ந்தது.

“சந்தேகம் தரும் வகையில் நடந்துகொண்ட ஆடவர் ஒருவர் தாமான் மொலெக்கின் பெர்சியாரான் பூமி ஹிஜாவ் பகுதியில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றதை அவர்கள் கண்டனர்,” என்று திரு குமார் சனிக்கிழமையன்று அறிக்கையில் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட காவல்துறைக் குழு அந்த மோட்டார் சைக்கிளை அருகிலுள்ள பகுதியில் நிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் சோதனையிடவிருந்தபோது சந்தேக நபர் அவர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் பலமுறை சுட்டதாகவும் அதற்குப் பதில் நடவடிக்கையாக அதிகாரிகளும் சுடவேண்டியிருந்ததாகவும் திரு குமார் தெரிவித்தார்.

“சோதனையிட்டபோது, மலேசியரான சந்தேக நபர் சுடப்பட்டிருந்ததைத் தெரிந்துகொண்ட காவல்துறையினர் அவர் உயிரிழந்ததைச் சம்பவ இடத்தில் உறுதிசெய்தனர்,” என்றார் திரு குமார்.

குறிப்புச் சொற்கள்