தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: காவல்துறையினர் மூவர் பலி

1 mins read
d37161bc-c0f5-4670-b9c5-b1af50fb528d
குடும்பத்தில் தகராறு என்ற புகாரை விசாரிக்கச் சென்ற காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகினர். - படம்: பிக்சாபே

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று காவல்துறை அதிகாரிகள் மாண்டனர், மேலும் இருவர் காயமுற்றனர் என்று காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துப்பாக்கிக்காரன் அந்த இடத்திலேயே காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டான் எனவும் காயமுற்ற இரு அதிகாரிகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சீராக உள்ளதாகவும் உயர் அதிகாரியான மாநில காவல்துறை ஆணையர் கிறிஸ்டஃபர் பாரிஸ் கூறினார்.

குடும்பத் தகராறு சம்பவத்தை விசாரிக்க ஒரு முகவரிக்குச் சென்றபோது, வீட்டிலிருந்த ஆடவர் காவல்துறையினரை நோக்கிச் சுட்டார். சம்பவம் நிகழ்ந்த இடம், பிலடெல்ஃபியா பகுதியிலிருந்து தென்மேற்கே 210 கிலோமீட்டர் தொலைவில் யோர்க் கவுன்டி என்ற வட்டாரத்தில் கொடோரஸ் நகரில் உள்ளது.

“துப்பாக்கியால் சுட்டவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்கிறேன். விசாரணை தொடர்கிறது, பொதுமக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை. பல விவரங்கள் இருந்தாலும் இந்த நேரத்தில் அவற்றை நாங்கள் வெளியிடப்போவதில்லை,” என்று ஆணையர் பாரிஸ் கூறினார்.

“யோர்க் வட்டாரத்துக்கும் பென்சில்வேனியாவின் அனைவருக்கும் மிகவும் துயரமான நாள் இது,” என்று பென்சில்வேனியா மாநில ஆளுநர் ஜொஷ் ஷப்பிரோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்