நியூயார்க்: அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில் வியாழக்கிழமை (மே 30) துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
துப்பாக்கிச்சூடு விட்டியர் பகுதியில் நடந்தது, அதில் சிலர் காயமடைந்ததாகவும் மூவர் உயிரிழந்ததாகவும் அந்நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாண்டவர்களில் காவல்துறை அதிகாரியும் ஒருவர். துப்பாக்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தியவரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஒரு காவல்துறை அதிகாரியும் தீயணைப்பு வீரர் ஒருவரும் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. காயமடைந்த காவல்துறை அதிகாரி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மினியாபோலிசில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு காவல்துறை அதிகாரி துப்பாக்கித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

