‘பாப் மார்ட்’ கடையில் வாடிக்கையாளர்கள் காயம்

1 mins read
d4ff03e4-f095-4be1-ab32-70786d98943d
‘பாப் மார்ட்’ தாய்லாந்தில் அதிகாரபூர்வமாக அதன் முதல் கடையை செண்ட்ரல்வேர்ல்டு கடைத்தொகுதியில் திறந்தது. - படம்: தி நேஷன்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் முதன்முறையாகத் திறக்கப்பட்ட ‘பாப்’ மார்ட்’ கடையில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனையாகும் கலை விளையாட்டுப் பொருள்களை அதிகமானோர் விரைந்து வாங்கச் சென்றபோது, அவர்களில் சிலர் காயமடைந்தனர்.

புகழ்பெற்ற அந்தச் சீன விளையாட்டு நிறுவனம் தாய்லாந்தில் அதிகாரபூர்வமாக அதன் முதல் கடையை செண்ட்ரல்வேர்ல்ட் கடைத்தொகுதியில் திறந்தது.

10,000 ‘பாட்’டுக்குமேல் செலவிடும் வாடிக்கையாளர்கள் தாய்லாந்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு விடப்படும் பாண்டா கலை விளையாட்டுப் பொருள் ஒன்றை வாங்கிக்கொள்ளலாம்.

அத்தகைய 140 விளையாட்டுப் பொருள்கள் மட்டுமே விற்கப்பட்டன.

அவற்றை வாங்குவதற்காக செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் இரவு முழுதும் கடைக்கு அருகே காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்