உக்ரேனில் அமைதியை நிலைநாட்ட தாமதிக்கக்கூடாது: போப் லியோ

உக்ரேனில் அமைதியை நிலைநாட்ட தாமதிக்கக்கூடாது: போப் லியோ

2 mins read
5ca1f440-bd72-482a-b711-b669f538c73f
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்துமுடிந்த ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டத்தின்போது போப் லியோ பேசினார். - படம்: ஏஎஃப்பி

வத்திகன் நகர்: உக்ரேனில் அமைதியை நிலைநிறுத்தும்படியான வேண்டுகோளைக் கத்தோலிக்கர்களின் தலைவர் போப் லியோ ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) விடுத்துள்ளார்.

உக்ரேனுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையே சமரசம் செய்ய அமெரிக்கா முற்பட்டுள்ள வேளையில், நான்காண்டாகத் தொடரும் பூசலை முடிவுக்குக் கொண்டுவருவதைத் தள்ளிப்போடக்கூடாது என்று போப் லியோ வலியுறுத்தினார்.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேன்மீது முழுவீச்சில் போர் தொடுத்த ர‌ஷ்யா, ஆக அண்மையில் ஆளில்லா வானூர்தி, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஆகியவற்றைக் கொண்டு உக்ரேனைத் தாக்கியது.

உக்ரேனின் நிலை குறித்து கவலை அடைந்திருப்பதாகச் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்துமுடிந்த ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டத்தைத் தொடர்ந்து மக்களிடம் போப் லியோ பேசினார்.

ஆயிரத்துக்கும் அதிகமானோர் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஞாயிறு பிரார்த்தனை கூட்டத்தில் திரண்டனர்.
ஆயிரத்துக்கும் அதிகமானோர் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஞாயிறு பிரார்த்தனை கூட்டத்தில் திரண்டனர். - படம்: இபிஏ

“போரில் பலர் மாண்டனர். பல குடும்பங்களும் பலரின் வாழ்க்கையும் சிதைக்கப்பட்டன. சொல்லொணாத் துயரம்,” என்று போப் லியோ கூறினார்.

உக்ரேனுக்கும் ர‌ஷ்யாவுக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயன்றுவருகிறது. ஆனால் அதில் பெரிய அளவில் முன்னேற்றம் காணப்படவில்லை.

ர‌ஷ்யாவின் கிழக்கு டோன்பஸ் வட்டாரம் உக்ரேன் வசம் உள்ளது.

அதில் சில பகுதிகளிலிருந்து பின்வாங்கும்படி ர‌ஷ்யா முன்வைத்த கோரிக்கையை உக்ரேன் நிராகரித்தது.

இந்நிலையில் அமைதியை ஒத்திவைக்கக்கூடாது என்ற போப் லியோ, அனைவரிடமும் அமைதி குறித்த எண்ணம் இருக்கவேண்டும் என்றும் பொறுப்புள்ள முடிவுகள் கூடிய விரைவில் எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மனிதகுலம் என்ற ஒட்டுமொத்த குடும்பத்தின்மீது போர் என்பது பெரும் காயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் வருணித்த போப் லியோ, மரணம், பேரழிவு, பல தலைமுறைகளுக்குத் தொடரும் வேதனை ஆகியவற்றை அது விட்டுச்செல்வதாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்