தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வர்த்தகம், மக்கள் போக்குவரத்து தொடர்பாக சிங்கப்பூர்-மலேசிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை

1 mins read
1ab41614-4691-4cf9-8258-9082b484f75a
ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் இரு நாட்டு அதிகாரிகளும் சந்தித்துப் பேசினர். - கோப்புப் படம்: சாவ்பாவ்

ஜோகூர்-சிங்கப்பூர் இடையே மக்கள் நடமாட்டத்தையும் சரக்குப் போக்குவரத்தையும் மேம்படுத்துவது போன்ற பிரச்சினைகள் பற்றிப் பேச சிங்கப்பூர், மலேசிய அதிகாரிகள் ஜோகூரில் சந்தித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவது பற்றிப் பேசவும் அவர்கள் நேரில் சந்தித்தனர்.

ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை மூன்று நாள்கள் இரு நாட்டு அதிகாரிகள் இடையிலான சந்திப்பு நடைபெற்றதாக சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) கூறியது.

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் தொடர்பான தொடக்கநிலைப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி அந்தச் சந்திப்பு என்றும் அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

பொருளியல் துறைகள் மற்றும் திறன் மேம்பாடு சம்பந்தப்பட்ட அம்சங்களும் அந்தச் சந்திப்பின்போது எழுப்பப்பட்டன.

வட்டாரத்திற்குட்பட்ட வர்த்தகச் சூழல் முறையை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்த அம்சங்கள் பற்றிப் பேசப்பட்டது.

“இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகங்களும் சமூகங்களும் பலனடையும் வகையில் ஒன்றோடொன்று ஒத்துழைக்கக்கூடியதாக ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தை சிங்கப்பூரும் மலேசியாவும் கருதுகின்றன.

“சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கான முழுமையான உடன்பாட்டின் வழி இரு நாடுகளும் அவற்றின் மக்களும் இருதரப்பு நன்மைகளைப் பெற மலேசியாவுடன் இணைந்து சிங்கப்பூர் தொடர்ந்து பணியாற்றும்,” என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

ஆண்டின் பிற்பாதியில் நிகழவிருக்கும் 11வது மலேசியா-சிங்கப்பூர் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பு தொடர்பாகவும் இருநாடுகளும் பணியாற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்