தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமான விபத்தில் மரணமடைந்தோருக்கு சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தது

1 mins read
d188d914-1b33-4779-bf65-3f99275ba8cd
வெர்ஜினியா மாநிலத்தில் ஆகாய வெளியில் விமானத்துக்கும் ராணுவ ஹெலிகாப்டருக்கும் இடையே ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து பொட்டோமேக் ஆற்றில் மீட்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் ரோனல்ட் ரீகன் விமான நிலையத்துக்கு அருகில் புதன்கிழமை (ஜனவரி 29ஆம் தேதி) ஏற்பட்ட விபத்தில் 67 பேர் மரணமடைந்தனர்.

இதற்கு தற்பொழுது சிங்கப்பூர் தலைவர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

“அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றும் அமெரிக்க ராணுவ பிளேக் ஹாக் ஹெலிகாப்டர் ஒன்றும் மோதிய மோசமான விபத்து சம்பவத்தில் இறந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் சிங்கப்பூர் அரசு தனது ஆழ்ந்த இரங்கலை,” தெரிவித்துக்கொள்கிறது என வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 31ஆம் தேதி) அன்று கூறினார்.

இதன் தொடர்பில் சனிக்கிழமை (பிப்ரவரி 1ஆம் தேதி) பிரதமர் லாரன்ஸ் வோங் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு அனுப்பிய கடிதத்தில் அந்த விபத்து தமக்கு ஆழ்ந்த கவலை அளித்துள்ளதாக தெரிவித்தார்.

“எங்கள் சிந்தனையும் பிரார்த்தனைகளும் மாண்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உரித்தாகட்டும். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் அன்பிற்கு உரியவர்கள், சமூகங்கள் வழங்கும் ஆதரவில் ஆறுதல் பெறுவர் என்று நம்புகிறேன்,” எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்