தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியா: நான்கு வயதுச் சிறுவன் விபத்தில் உயிரிழப்பு; சிங்கப்பூரர் கைது

1 mins read
97c1a712-73d6-496f-9c48-a612cd4c4932
சிங்கப்பூரர் ஓட்டிய மெர்சிடிஸ் பென்ஸ் கார், சிறுவனும் அவனுடைய தந்தையும் சென்ற மோட்டார்சைக்கிள்மீது மோதியது. - படங்கள்: இன்ஃபோரோட்பிளாக்/ஃபேஸ்புக்

போர்ட் டிக்சன்: மலேசியாவில் நான்கு வயதுச் சிறுவன் உயிரிழக்கக் காரணமான விபத்து தொடர்பில் 33 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை போர்ட் டிக்சன் நகரில் பிற்பகல் 1.30 மணியளவில் அவ்விபத்து நிகழ்ந்தது.

சிங்கப்பூரர் சென்ற பென்ஸ் கார், அச்சிறுவனும் அவனுடைய தந்தையும் சென்ற மோட்டார்சைக்கிள்மீது மோதியதாகக் கூறப்பட்டது.

முகம்மது ஷகேஸி இமான் முகம்மது ஷஸ்ரேன் என்ற அச்சிறுவன் போர்ட் டிக்சன் மருத்துவமனையில் மாண்டுபோனான். அவனுடைய 26 வயது தந்தைக்கு வலது தோளிலும் வலது காலிலும் எலும்புமுறிவு ஏற்பட்டது.

காரை ஓட்டிச் சென்ற சிங்கப்பூரருக்கு காயமெதுவும் ஏற்படவில்லை.

விபத்து தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

கைதான சிங்கப்பூரரை ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றமிழைத்தது உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு இரண்டு முதல் பத்தாண்டுகள் வரை சிறையும் 5,000 ரிங்கிட் (S$1,460) முதல் 20,000 ரிங்கிட்வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்