தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் பாரு சாலை விபத்தில் மாண்ட சிங்கப்பூர் ஆடவர்

1 mins read
153bbc1b-5ce7-45b0-a182-dd4b598e64e8
விபத்தில் கார் நொறுங்கியது. - படங்கள்: மலேசிய ஊடகம்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 27 வயது சிங்கப்பூர் ஆடவர் உயிரிழந்தார். அவர் பயணம் செய்துகொண்டிருந்த தனியார் வாடகை கார் விபத்தில் நொறுங்கியது. அந்த காரின் 48 வயது ஓட்டுநரும் மாண்டார்.

சிங்கப்பூர் ஆடவர் பயணம் செய்த கார் லாரி மீது மோதியதாக ஜோகூர் காவல்துறை கூறியது. அந்த கார் ஜோகூர் பாருவிலிருந்து ஸ்கூடாய் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கார் ஓட்டுநர் கட்டுப்பாடு இழந்து லாரி மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

கார் ஓட்டுநருக்குத் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். காரில் பயணம் செய்த ஆடவருக்குச் சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி மாண்டார்.

விபத்துக்குள்ளான லாரியை ஓட்டிய 28 வயது ஆடவர் காயமின்றி தப்பினார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்