ஜோகூரில் குடும்பத்தாரைத் தற்காத்த சிங்கப்பூரருக்குக் காயம்

1 mins read
c6b1f6b7-7f9c-47f1-ae5b-c470f21ecb1f
கோப்புப் படம்: - தமிழ் முரசு

சீனப் புத்தாண்டுக்காக தனது மனைவியின் சொந்த ஊரான மலேசியாவின் குளுவாங் நகருக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

மலேசியாவில் தாக்குதல்காரர்களிடமிருந்து தனது குடும்பத்தைத் தற்காத்த அந்த ஆடவருக்குத் தலையிலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டதாக அவரது மனைவி திருவாட்டி ஃபாங் தெரிவித்தார். மலேசியாவின் சீன மொழி செய்தித்தாளான ‘சைனா பிரெஸ்’ஸிடம் அவர் அவ்வாறு கூறினார்.

ஜோகூர் மாநிலத்தில் உள்ள குளுவாங்கில் தனது வீட்டில் மூன்று நாள்களுக்குச் சீனப் புத்தாண்டைக் கொண்டாடியபோது ஆடவர் இருவர் தங்களுக்குத் தொடர்ந்து தொந்தரவு இழைத்ததாக 42 வயது திருவாட்டி ஃபாங் குறிப்பிட்டார்.

தம்பதி இருந்த வீட்டுக்கு வெளியே தாக்குதல்காரர்கள் பட்டாசு வெடித்து சாயம் தெளித்தனர்; இரு கார்களின் கண்ணாடிகளையும் அவர்கள் உடைத்தனர் என்று திருவாட்டி ஃபாங் தெரிவித்தார். தங்கள் வீட்டைப் பாதுகாக்க கோல்களைக் கொண்டு சண்டையிட்டுத் தற்காத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தனது குடும்பத்தார் தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அப்படி சண்டையிட்டபோது திருவாட்டி ஃபாங்கின் கணவருக்குத் தலை, கணுக்கால், நெஞ்சு, கைகளில் காயங்கள் ஏற்பட்டன. தனது குடும்பத்தார் கடன் முதலைகளிடமிருந்து கடன் பெறவில்லை என்றும் கடனைத் திருப்பித் தருமாறு எந்தக் குறிப்பையும் தாக்குதல்காரர்கள் விட்டுச் செல்லவில்லை என்றும் திருவாட்டி ஃபாங் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்