தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் மோட்டார் சைக்கிள் விபத்து; சிங்கப்பூர்ப் பெண் உயிரிழப்பு

1 mins read
aaf1ca4d-f988-498d-8751-1288eac99ed4
மாண்ட 29 வயது பெண்ணுக்குத் தலை. உடல், காலில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாளன்று ஜோகூரில் உள்ள விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து நிகழ்ந்தது.

இதில் சிங்கப்பூர்ப் பெண் ஒருவர் மாண்டார்.

அவர் பயணம் செய்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சாலைத் தடுப்புமீது மோதியது.

மாலை 5.24 மணி அளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக மூவார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ரயீஸ் முக்லிஸ் அஸ்மான் அசிஸ் டிசம்பர் 24ஆம் தேதியன்று தெரிவித்தார்.

28 வயது மலேசிய ஆடவர் ஓட்டிச் சென்ற அந்த மோட்டார் சைக்கிளில் அந்த 29 வயது பெண் பயணம் செய்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவருக்குத் தலை, கரம், உடலில் காயங்கள் ஏற்பட்டன.

அப்பெண்ணுக்குத் தலை, உடல், காலில் காயங்கள் ஏற்பட்டன.

இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருவரும் ஜோகூர் பாருவிலிருந்து தலைநகர் கோலாலம்பூரை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்ததாக அறியப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்