அமெரிக்காவின் மிஸிசிப்பி நகரில் துப்பாக்கிக்காரன் ஒருவன் ஆறு பேரை சுட்டுக்கொன்றுள்ளான். தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அவன் கைதுசெய்யப்பட்டான்.
துப்பாக்கிக்காரன் முதலில் கடை ஒன்றுக்கு சென்று அங்கிருந்த ஆடவர் ஒருவரை சுட்டுக்கொன்றான். பின்னர், அருகே இருந்த வீட்டிற்கு சென்று அந்த வீட்டில் இருந்த பெண்ணை சுட்டுக்கொன்றான். அதன் பிறகு அவன் வசிக்கும் வீட்டிற்கு சென்று அங்கிருந்த இருவரை சுட்டுக்கொன்றான்.
துப்பாக்கிக்காரன் ஓட்டிச்சென்ற வாகனத்தை துரத்திய காவல்துறையினர் இறுதியாக வேறொரு வீட்டுக்கு அருகே அவனை சுற்றிவளைத்தனர். அந்த வீட்டில் மேலும் இருவர் மாண்டுகிடந்தனர்.
துப்பாக்கிக்காரன் தனியாக தாக்குதலை நடத்தியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவனுடைய நோக்கம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

