நியூயார்க் ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த பெண் எரியூட்டிக் கொலை

நியூயார்க் ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த பெண் எரியூட்டிக் கொலை

1 mins read
0da4ca61-3d82-49bd-a214-22ad6a86070a
பெண்ணை உயிருடன் எரித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை நியூயார்க் காவல்துறையினர் கைது செய்தனர். - படங்கள்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: நியூயார்க் ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த பெண் ஒருவரை ஆடவர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொன்றதாக அந்நகரக் காவல்துறை தெரிவித்தது.

இதில் அப்பெண் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் அமெரிக்க நேரப்படி டிசம்பர் 22ஆம் தேதி காலை நிகழ்ந்தது.

அவசரகால மீட்புப் பணியாளர்கள் தீயை அணைத்தனர்.

ஆனால் அப்பெண் சம்பவ இடத்திலேயே மாண்டதாகக் காவல்துறை கூறியது.

இதையடுத்து, பெண்ணை எரியூட்டிக் கொன்ற ஆடவரை அதிகாரிகள் வலைவீசித் தேடினர்.

சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மாண்ட பெண்ணின் அடையாளம், வயது ஆகியவை உடனடியாக வெளியிடப்படவில்லை.

தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

விசாரணை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்