ஹான்ட்லோவா: ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோ துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
‘ஹான்ட்லோவா’ எனும் நகரில் உள்ள கலாசார சமூக நிலையத்திற்கு முன்னால் திரு ஃபிக்கோ சுடப்பட்டதாகவும் அந்த ஊடகங்கள் குறிப்பிட்டன.
அங்கு அரசாங்கக் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சத்தம் சில முறை கேட்கப்பட்டதாக அங்கிருந்த செய்தியாளர்கள் கூறினர்.
ஸ்லோவாக்கியப் பிரதமர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
கலாசார நிலையத்திற்கு வெளியில் சந்தேக நபரைத் தடுக்க, சில ஆடவர்கள் விரைந்து செல்வதைக் காணொளி ஒன்று காட்டியது.

