தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டின்மீது விழுந்த விமானம்; பலர் மரணம்

1 mins read
93a35c3c-d83e-4831-9bb5-7bf092b1449b
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடமாடும் வீடு ஒன்றின்மீது சிறு விமானம் விழுந்து நொறுங்கியதில் பலர் உயிரிழந்தனர்.

ஃபுளோரிடாவின் கிளியர்வாட்டர் நகரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 1) இவ்விபத்து நிகழ்ந்தது.

கிளியர்வாட்டர் தீயணைப்பு, மீட்புத் துறை வெளியிட்ட படங்கள், அந்த நடமாடும் வீடு தீப்பிடித்து எரிந்ததையும் அதிலிருந்து பெரும்புகை கிளம்பியதையும் காட்டின.

விமானத்தில் இருந்தவர்களும் வீட்டில் இருந்தவர்களும் மாண்டுபோனதாக கிளியர்வாட்டர் தீயணைப்புத் துறைத் தலைவர் ஸ்காட் ஈலர்ஸ் தெரிவித்தார். அதே நேரத்தில், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று அவர் குறிப்பிடவில்லை.

எத்தனை பேர் விமானத்தில் இருந்தனர் என்றும் தெரியவில்லை.

விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்குமுன் அதன் விமானி உதவி கேட்டு அவசர அழைப்பு விடுத்ததாக திரு ஈலர்ஸ் தெரிவித்தார்.

அந்த விமானி இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார். தரையில் இருந்த இன்னொருவர் காயமடைந்ததாகவும் அவர் சிகிச்சைக்கு மறுத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.

ஒட்டுமொத்தத்தில், அந்த நடமாடும் வீட்டுப் பூங்காவில் இருந்த நான்கு வீடுகள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்