தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க விரைவுச்சாலையில் விழுந்த சிறிய விமானம்; இருவர் மரணம்

1 mins read
d02fa5a2-7236-4c19-b5d2-77e2133ef4a0
விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். - கோப்புப்படம்: பிக்சாபே

மசாசூசெட்ஸ்: அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள விரைவுச்சாலையில் சிறிய விமானம் ஒன்று விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இதில் இருவர் மாண்டனர். தரையில் இருந்த ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது, அவர் கார்மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் திங்கட்கிழமை (அக்டோபர் 13) காலை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து காலை 8.15 மணிவாக்கில் டார்ட்மோத் பகுதியில் உள்ள இன்டர்ஸ்டேட் 195ல் நடந்தது. பாதுகாப்புக் காரணங்கள் கருதி விரைவுச்சாலையின் இரண்டு பக்கங்களிலும் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது. பிற்பகல் 4 மணிவாக்கில் போக்குவரத்து வழக்க நிலைக்குத் திரும்பியது.

விபத்தில் மாண்டவர்கள் தாமஸ் பெர்கின்ஸ், 68, அகத்தா பெர்கின்ஸ் 66, என்று விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விமானம் நியூ பெட்போர்ட் விமான நிலையத்திலிருந்து கிளம்பியதாகவும் அந்த விமானம் மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்பி வரும்போது விபத்து ஏற்பட்டதாவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்த படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டன. காணொளிகளில் விமானம் மற்றும் ஒரு வெள்ளை கார் கடுமையாகச் சேதமடைந்திருந்ததைக் காட்டின.

விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்