பெரிய அளவில் ராணுவ அணிவகுப்பை நடத்தவுள்ள தென்கொரியா

1 mins read
7df33d28-b988-48d6-9a30-1eb82d686b89
தென்கொரியாவின் சொந்தத் தயாரிப்பிலான ஆயுதங்களை வெளிக்காட்ட கியோங்ஜி மாநிலத்தின் சியோங்னாம் பகுதியில் உள்ள சோல் ஆகாயத் தளத்தில் சடங்கு நடைபெறவுள்ளது. - படம்: ஏஎஃப்பி

தென்கொரியா பத்தாண்டுகளில் முதன்முறையாக இம்மாத இறுதியில் பெரிய அளவிலான ராணுவ அணிவகுப்பை நடத்தவிருக்கிறது.

அணிவகுப்பில் தென்கொரியாவின் உத்திபூர்வ ஆயுதங்கள் வெளிக்காட்டப்படும்.

அந்த அணிவகுப்பு 75ஆவது ஆயுதப் படை தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 26ஆம் தேதியன்று நடைபெறவிருக்கிறது.

அணிவகுப்புக்கு முன்னர் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ சடங்கு கியோங்ஜி மாநிலத்தின் சியோங்னாம் பகுதியில் உள்ள சோல் ஆகாயத் தளத்தில் நடைபெறவுள்ளது.

கேஎஃப்-21 ரக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், தொலைதூர ஏவுகணைகள் உள்ளிட்ட தென்கொரியாவின் புதிய ஆயுதங்கள் சடங்கின்போது காட்சிப்படுத்தப்படும்.

அதன் பிறகு பிற்பகலில் சோலின் குவாங்வாமுன் பகுதியில் பெரிய அளவிலான ராணுவ அணிவகுப்பு நடைபெறும்.

“வலிமை மூலம் வலுவான ராணுவம், வலுவான பாதுகாப்பு” என்பதே இவ்வாண்டு அணுவகுப்பின் கருப்பொருளாகும்.

நாட்டைத் தற்காப்பதற்கான ராணுவத்தின் உறுதியை அது வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, தூண்டுதல் நடவடிக்கைகள் அதிகரித்துவரும் நிலையில் வடகொரியாவுக்குச் செய்தி அனுப்புவதில் தென்கொரியா கவனம் செலுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்