13 குழந்தைகளைப் பெற்றெடுத்த இரு பெண்களுக்குச் சிறப்புப் பதக்கம்

1 mins read
93d7ece9-dbf0-4dee-86b3-b58f1aa162e5
தென்கொரிய நடிகை நம் போ ராவின் தாயார் குடிமைத் தகுதிப் பதக்கத்தை (Civil Merit Medal) பெற்றவர்களில் ஒருவர். - படம்: நம் போ ரா/இன்ஸ்டகிராம்

சோல்: தென்கொரியாவின் சுகாதார, நல்வாழ்வு அமைச்சு அண்மையில் ஆளுக்கு 13 குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்கள் இருவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது.

அந்தப் பெண்களில் ஒருவர் நடிகை நம் போ ராவின் தாயாராவார்.

திருவாட்டி லீ யோங் மி, 59, எனும் அவருக்குக் குடிமைத் தகுதிப் பதக்கம் (Civil Merit Medal) வழங்கப்பட்டது.

அரசாங்கச் சேவைக்கு வாழ்வை அர்ப்பணிப்போர், மற்றவர்களைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைப்போர், தங்களின் சாதனைகள், நன்கொடைகள் மூலம் நாட்டுக்குப் பங்களிப்போர் ஆகியோருக்கு அந்த விருது வழங்கப்படுகிறது.

திருவாட்டி லீ தமது 23வது வயதிலிருந்து 44வது வயது வரை 13 முறை குழந்தை பெற்றுள்ளார். அந்தக் குழந்தைகள் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்குப் பங்களிக்கும் வகையில் அவர்களை வளர்த்துள்ளார் திருவாட்டி லீ. அவரது பிள்ளைகளில் ஒருவர் நடிகை நம் போ ரா. மற்ற பிள்ளைகளில் சிலர் கலைஞர், வங்கி ஊழியர், பல் மருத்துவ நிபுணராக உள்ளனர்.

விருதுபெற்ற மற்றொருவர் திருவாட்டி இயொம் கியே சுக், 60. அவருக்கு குடிமைத் தகுதிப் பதக்கத்தின் ஐந்தாம் தரப் பதக்கமான ‘சியோங்னியூ’ வழங்கப்பட்டது.

அரசியல், பொருளியல், சமூகம், கல்வி ஆகியவற்றில் தலைசிறந்த சாதனைகளைப் படைத்து நாட்டுக்குப் பங்களிப்போருக்கு அந்த விருது வழங்கப்படுகிறது.

அவர் 1986க்கும் 2007ஆம் ஆண்டுக்கும் இடையே ஐந்து மகன்களையும் எட்டு மகள்களையும் பெற்றெடுத்தார்.

குறிப்புச் சொற்கள்