சோல்: அனைத்துலக எண்ணெய் விலைகள் அதிகரித்தால் பொதுப் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து தென்கொரியா ஆலோசித்து வருகிறது.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை $120 டாலரிலிருந்து $130 டாலருக்கு இடைப்பட்டிருந்தால் கார்கள் மீதான கட்டுப்பாடுகளை தென்கொரிய அரசாங்கம் விரிவுபடுத்தக்கூடும் என்று அந்நாட்டு மூத்த அதிகாரி குறிப்பிட்டார்.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை $100 டாலரிலிருந்து $110 டாலருக்கு இடைப்பட்டிருக்கிறது.
இதற்குமுன் 1991ஆம் ஆண்டு வளைகுடா போரின்போது தென்கொரிய அரசாங்கம் எரிசக்தியை மிச்சப்படுத்த 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே பொதுப் போக்குவரத்தை இயக்குவதற்கான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
“மத்திய கிழக்கு நிலவரம் மோசமடைந்தால் நெருக்கடி நிலை எச்சரிக்கை நிலைக்கு உயர்த்தப்படவேண்டும். அத்தகைய சூழலில் எரிசக்திப் பயன்பாட்டை முடக்கவேண்டும்,” என்று தென்கொரிய நிதியமைச்சர் கூ யுன் சியோல் கூறினார்.
குடும்பங்கள் மீதான சுமையைக் குறைக்க எரிபொருள் வரிகளை மேலும் குறைப்பது பற்றி அரசாங்கம் ஆலோசிக்கும் என்றும் திரு கூ குறிப்பிட்டார்.
தனியார் துறை வாகனங்கள்மீது கட்டாய கட்டுப்பாடுகளை விதிப்பதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தென்கொரிய நிதியமைச்சு தனிப்பட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தென்கொரியா, கிட்டத்தட்ட 70 விழுக்காட்டுக் கச்சா எண்ணெய்யை மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்கிறது.
தொடர்புடைய செய்திகள்
பொதுப் போக்குவரத்து ஐந்து நாள்களுக்கு ஒருமுறை மட்டும் செயல்படும் கட்டுப்பாட்டைத் தென்கொரிய அரசாங்கம் கடந்த வாரம் அமல்படுத்தியது. வாகன் உரிம எண் பலகைகளின் அடிப்படையில் வாகனங்கள்மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சாம்சுங் இலெக்ட்ரோனிக்ஸ், எஸ்கே குழுமம் ஆகிய மிகப் பெரிய நிறுவனங்கள் எரிசக்தியை மிச்சப்படுத்தும் முயற்சிகளைப் பின்பற்றுகின்றன. தனிப்பட்ட வாகனங்கள் ஓட்டுவதை ஊழியர்கள் நிறுத்திக்கொண்டு எரிபொருளை மிச்சப்படுத்தும் வழிகளைக் கடைப்பிடிக்கும்படி அவை அறிவுறுத்தின.
தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மூத்த அரசியல்வாதிகளும் பொதுப் போக்குவரத்தையும் சைக்கிள்களையும் பயன்படுத்தும்படி பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

