தென்கொரியாவில் சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழும் இளையர்கள் சமூகத்தில் இணைந்து வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
ஒதுங்கி வாழும் இளையர்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்தால் அவர்களுக்கு
மாதந்தோறும் கிட்டத்தட்ட 650 வெள்ளி ஊக்கத்தொகை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் அந்த ஊக்கத்தொகைக்குத் தகுதியானவர்கள்.
அவர்களுக்கு கல்வி, வேலை, சுகாதார ஆதரவு போன்றவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தென்கொரியாவில் 19 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் ஏறத்தாழ 350,000 பேர் சமூகத்தைவிட்டு ஒதுங்கி வாழ்வதாகத் தரவுகள் கூறுகின்றன.
சமூகத்தைவிட்டு தள்ளி வாழ்பவர்கள் போதிய அடிப்படை கல்வி இல்லாமல் வறுமையில் வாடுவதாகக் கூறப்படுகிறது.

