ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைக்கத் திட்டமிடும் தென்கொரியா

1 mins read
956ffd93-1094-4acd-bc63-a841d71fb8a4
தென்கொரியாவில் 2024ஆம் ஆண்டு வேலை மணிநேரம் 1,859ஆக இருந்தது. பொருளியல் ஒத்துழைப்பு, வளர்ச்சி நிறுவனத்தின்கீழ் வரும் நாடுகளில் அதுவே ஆக அதிகம். - படம்: இபிஏ

சோல்: தென்கொரியாவில், ஊழியர்கள் உரிய நேரத்திற்கும் அப்பால் கூடுதலாக வேலை செய்வதைக் குறைக்க வழிவிடும் சட்டத்தை நடைமுறைப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திட்டமிடுகிறது.

வேலை நேரத்திற்குப் பிறகு பணி சம்பந்தப்பட்ட தகவல்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை எனும் உரிமையை அந்தச் சட்டம் ஊழியர்களுக்கு வழங்கும். ஊழியர்கள் அரை நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளவும் சட்டம் அனுமதியளிக்கும்.

புதிய சட்ட மசோதா குறித்து வேலைவாய்ப்பு, தொழிலாளர் அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) அறிவித்தது.

வேலை நேரத்திற்கு அப்பால் பணிபுரிவது போன்ற கூடுதல் படித்தொகைகளை உள்ளடக்கிய நிலையான மாதச் சம்பளம் தொடர்பிலான விதிமுறைகளைக் கடுமையாக்கவும் மசோதா முனையும்.

பொருளியல் ஒத்துழைப்பு, வளர்ச்சி நிறுவனத்தின்கீழ் வரும் நாடுகளில் அதுவே ஆக அதிகம். திட்டமிடப்பட்டுள்ள மாற்றங்கள் நடப்புக்கு வந்தால், 2030க்குள் வருடாந்தர வேலை மணிநேரம் 1,708க்குக் குறையும்.

தென்கொரிய அமைச்சு, இந்த ஆண்டின் முற்பாதியில் முழுமையான மசோதாவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்