‘தென்கொரிய ராணுவம் உண்மையான தோட்டாக்களுடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தது’

1 mins read
043baf60-8bf0-46ae-bf70-d31ad710ad1a
தோட்டாக்கள் எதுவும் இன்றி ராணுவம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தலைநகர் பாதுகாப்புப் படை தெரிவித்தது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவில் டிசம்பர் 3ஆம் தேதி தற்போதைய தற்காலிக பதவிநீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோல் ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியபோது நாடாளுமன்றத்திற்குள் ராணுவம் துப்பாக்கிகளுடன் நுழைந்தது.

ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவு ஆயிரக்கணக்கான சுற்று சுடக்கூடிய தோட்டக்களுடன் வந்தது. ஏறக்குறைய 3,960 உண்மையான தோட்டாக்கள் ராணுவத்திடம் இருந்ததாக டிசம்பர் 17ஆம் தேதி வெளியான தகவல் குறிப்பிட்டது. டிசம்பர் 3, 4ஆம் தேதி இரவு சோல் நகரத்தில் உள்ள தேசிய தேர்தல் ஆணையம் உள்ளிட்ட இடங்களுக்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த வகையில் ராணுவத்தின் தலைநகர் பாதுகாப்புப் படை (சிடிசி) , நாடாளுமன்றத்திற்கு 5,000 உண்மையான தோட்டாக்களுடனும் 3,000 வெற்றுத் தோட்டாக்களுடனும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று உள்ளூர் ஒளிபரப்பு நிறுவனமான எம்பிசி தெரிவித்தது.

துணை பாதுகாப்பு அமைச்சரும், தற்காலிக பாதுகாப்பு அமைச்சருமான திரு கிம் சியோன்-ஹோ, ராணுவ வீரர்களுக்கு உண்மையான தோட்டாக்கள் எதுவும் விநியோகிக்கப்படவில்லை என்று டிசம்பர் 5 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சு கேள்வி எழுப்பியபோது, ​​தோட்டாக்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் தனிப்படை வீரர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்றும் கூறியது. தோட்டாக்கள் இல்லாமல்தான் தனது வீரர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டதாக சிடிசி கூறியது

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்