தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இருதரப்பு தீர்வுக்காக அமெரிக்கா செல்லும் தென்கொரிய அமைச்சர்கள்

1 mins read
191dad30-b1eb-4425-bd90-7b51bc65c82b
தென்கொரிய இடைக்கால பிரதமர் ஹன் டக் சூ (இடமிருந்து மூன்றாவது) அமைச்சரவை கூட்டத்தில் பேசினார். - படம்: ஈபிஏ

சோல்: தென்கொரிய இடைக்கால அதிபர் ஹன் டக் சூ, அமெரிக்காவுடன் இந்த வாரம் நடைபெறவிருக்கும் வர்த்தக பேச்சுவார்த்தை இருதரப்புக்கும் பயனளிக்கும் தீர்வுக்கு வழியமைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் பேசினார்.

ஏப்ரல் 24ஆம் தேதி தென்கொரிய நிதியமைச்சர் சோய் சங் மோக், தொழில் அமைச்சர் ஆன் டக் கியுன் ஆகியோர் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கோட் பெஸ்ஸண்ட், வர்த்தக அமைச்சர் ஜேமிசன் கிரீர் ஆகியோரைச் சந்திக்கவிருக்கின்றனர்.

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் திரு ஹன் சொன்னார்.

சோல் விமான நிலையத்தில் புறப்பாடுக்குமுன் செய்தியாளர்களிடம் அமைச்சர் சோய் பேசினார். தென்கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் கலந்துரையாடலுக்கான வாசலைத் திறந்த பிறகு நாடு திரும்ப விரும்புவதாகத் திரு சோய் கூறினார்.

தென்கொரிய வர்த்தக அமைச்சர் ஆன் புதன்கிழமை அமெரிக்காவுக்குப் புறப்படவிருக்கிறார்.

வர்த்தக கலந்துரையாடலில் பேசப்படும் விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் இணைந்து முடிவெடுப்பதாகக் குறிப்பிட்ட தென்கொரிய வர்த்தக அமைச்சு, எதுவும் இன்னும் உறுதியாகவில்லை என்றது.

வேண்டுமென்றே வரிகள் விதித்த அமெரிக்காவுடன் விரிவான பொருளியல் உடன்பாடுகளைச் செய்துகொள்ளவேண்டாம் என்று சீனா எச்சரித்தது.

குறிப்புச் சொற்கள்