அமைச்சரவையை மாற்றிய தென்கொரிய அதிபர்

அமைச்சரவையை மாற்றிய தென்கொரிய அதிபர்

2 mins read
2e320a21-f6bb-4905-b3f7-b65f34a9a84b
தென்கொரிய அமைச்சரவையில் அமைச்சர்களின் மாற்றங்களை அதிபர் லீ ஜே மியுங் அறிவித்தார். - படம்: இபிஏ
Google News Preferred Icon

சோல்: தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் தமது அமைச்சரவையில் மாற்றங்களை அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) அவர் அறிவித்த புதிய அமைச்சரவையில் ஆறு அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவுத் துறை, மின்கடத்தித் துறையில் உள்ள லீ அரசாங்கத்தின் பெருந்திட்டங்களையும் செயற்கை நுண்ணறிவையும் ஒருங்கிணைக்கும் புதிய அதிபருக்கு உதவிப் புரியும் பதவி எனப் பல மாதங்களாகக் காலியாக இருந்த இடங்களும் நிரப்பப்பட்டன.

தற்காப்பு, சட்டம் ஆகியவற்றுக்குப் புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஜனவரி மாதத்திலிருந்து சவூதி அரேபியாவுக்கான தென்கொரியத் தூதராகப் பொறுப்பு வகித்த ஓய்வுபெற்ற நான்கு நட்சத்திர ஜெனரல் காங் ‌ஷின்-சுல் தற்காப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இரண்டு தவணைக் கால வழக்கறிஞரும் முன்னாள் நீதிபதியுமான கிம் சியுங்-வொன் சட்ட அமைச்சராகப் பதவியேற்கிறார்.

சுகாதாரக் காரணங்களுக்காக முன்னாள் சட்ட அமைச்சர் ஜுங் சங்-ஹோ இம்மாதம் 24ஆம் தேதி பதவி விலகியதிலிருந்து காலியாக இருந்த பதவியை கிம் ஏற்கிறார்.

லீ தமது பொருளியல் கொள்கை குழுவிலும் மாற்றங்கள் செய்தார். தென்கொரிய அரசாங்கம் அதிக வட்டி விகிதம், தொடரும் பணவீக்கம், வலுவிழந்த தென்கொரிய நாணயம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

முதல் துணை நிதியமைச்சர் லீ ஹியங் - இல்ஐ பொருளியல் விவகாரங்களுக்கான துணையமைச்சராக லீ நியமித்தார். நிதி, பொருளியல் அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகிப்பார்.

போக்குவரத்துக்கான துணையமைச்சர் ஹோங் ஜீ-சன், நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து ஆகியவற்றுக்கான அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.

மக்கள் வாழ விரும்பும் வட்டாரங்களில் போதுமான வீடுகளைத் துரிதமாகக் கட்டித்தர ஹோங் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் லீ சோ யங் சிறிய, நடுத்தர நிறுவனங்கள், தொழில்முனைவர்கள் அமைச்சுக்குப் பொறுப்பு வகிக்கவிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
தென்கொரியாஅதிபர்அமைச்சரவைபதவி மாற்றம்