தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடுமையாக விவாதித்த தென்கொரிய அதிபர் வேட்பாளர்கள்

2 mins read
682e4f1f-5a8f-4ea3-8897-80698a62fa46
தென்கொரிய அதிபர் வேட்பாளர்கள். (இடமிருந்து) மக்கள் சக்தி கட்சியின் திரு லிம் மூன் சூ, ஜனநாயக தொழிலாளர் கட்சி திரு குவொன் யங்-குக், புதிய சீர்திருத்தக் கட்சியின் திரு லீ ஜுன் சியொக், ஜனநாயகக் கட்சியின் திரு லீ ஜே மியுங். - படம்: இபிஏ

சோல் - தென்கொரிய அதிபர் வேட்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 18) நடைபெற்ற முதல் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் காரசாரமாக பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவச் சட்டத்தை அறிவித்ததால் அரசியல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதையடுத்து அடுத்த அதிபருக்கான திடீர் தேர்தல் ஜூன் 3ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

மக்கள் மத்தியில் முன்னணி வகிக்கும் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங், சீனாவுடன் நெருக்கமான நட்பு பாராட்டுவதாகக் குறைகூறப்பட்டார். அவரது கருத்துகளைச் சுட்டிய எதிர்த்தரப்பினர் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பூசலில் தென்கொரியா தலையிட அவசியமில்லை என்றனர்.

ஆனால் தமது கொள்கையில் நடைமுறை சாத்தியத்தை முக்கியமாகக் கருதும் திரு லீ, தென்கொரியா ஒரே அடியாக அமெரிக்கா பக்கம் சாயக்கூடாது என்றும் சீனா, ர‌ஷ்யா ஆகியவற்றுடனான உறவைக் கட்டிக்காப்பதும் முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், தொழிற்சங்க ஊழியர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு, நான்கரை நாள் வேலை திட்டம், அமெரிக்க வரிகளுக்குப் பதில் நடவடிக்கைகள் எடுப்பதில் தென்கொரிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற பல விவகாரங்களையும் திரு லீ முன்வைத்தார்.

இரண்டு மணி நேரம் நீடித்த விவாதத்தில் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாட்டை எட்டுவதில் தென்கொரியா அவசரப்படத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.

ராணுவச் சட்டத்தை அறிவிப்பதற்குரிய அதிபரின் உரிமைகளைக் கட்டுப்படுத்தவிருப்பதாகவும் டிசம்பர் 3ஆம் தேதி ராணுவச் சட்டத்தை அறிவித்ததற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு லீ கூறினார்.

பழமைவாத மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் திரு கிம் மூன் சூ, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, வர்த்தகங்களுக்கு ஆதரவளிக்க கட்டுப்பாடுகளை நீக்குவது ஆகியவை குறித்து பேசினார்.

குறிப்புச் சொற்கள்