சோல்: தென்கொரிய அதிபர் தேர்தலில் போட்டியிடும் அனைவருமே ஆண்கள்.
வாக்களிப்பவர்களில் பாதிப் பேர் பெண்கள் என்றபோதும் பெண் வேட்பாளர்கள் இல்லை.
கடந்த 18 ஆண்டுகளில் தென்கொரிய அதிபர் தேர்தலில் பெண்கள் யாரும் போட்டியிடாதது இதுவே முதல்முறை.
இதற்கு முன்பு ஆகக் கடைசியாக 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆண்கள் மட்டுமே போட்டியிட்டனர்.
அத்தேர்தலில் 12 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இத்தகவலைத் தென்கொரியாவின் தேசிய தேர்தல் ஆணையத்தின் இணையத் தேர்தல் வரலாற்று அரும்பொருளகத்தின் அதிகாரபூர்வ இணையப்பக்கம் தெரிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது.
ஏழு வேட்பாளர்களில் நால்வர் பெண்கள்.
தொடர்புடைய செய்திகள்
அத்தேர்தலில் திருவாட்டி பார்க் கியூன் ஹாய் வெற்றி பெற்று அதிபரானார்.
தென்கொரியாவின் முதல் பெண் அதிபராக அவர் பொறுப்பேற்றார்.
அதையடுத்து, தென்கொரிய அதிபர் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஒரே ஒரு பெண் போட்டியிட்டார்.
2022ஆம் ஆண்டு தேர்தலில் 14 பேர் களமிறங்கினர்.
அவர்களில் இருவர் மட்டுமே பெண்கள்.