வெப்பநிலை குறித்து தென்கொரியா அறிவித்த முதல் எச்சரிக்கை

வெப்பநிலை குறித்து தென்கொரியா அறிவித்த முதல் எச்சரிக்கை

1 mins read
வெப்பநிலைக்கான புதிய எச்சரிக்கை செயல்முறை இவ்வாண்டு அறிமுகமானது
df9d0c36-ddd7-4c8d-91fa-6a2d9c46b21a
தலைநகர் சோலில் ஜூன் மாதம் குளிர்வூட்டும் பனிமூட்டச் சாதனத்துக்கு அருகே நடந்துசெல்லும் ஒருவர். - படம்: இபிஏ

சோல்: தென்கொரியா அவசரகால வெப்பத் தாக்கம் குறித்து அதன் முதல் எச்சரிக்கையை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) விடுத்துள்ளது.

பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்தும்படியும் தன்னிச்சையாக குளிரூட்டிக்கொள்ளும் செயல்பாடுகளை கடைப்பிடிக்குமாறும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இவ்வாண்டு அறிமுகமான அரசாங்கத்தின் வெப்பநிலைக்கான புதிய எச்சரிக்கை செயல்முறையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அந்த எச்சரிக்கைத் திட்டம் உதவும் என்று அதிகாரிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் வெப்பம் அங்கு கடுமையாகவும் நெடுநாள்கள் நீடித்தும் வருகிறது.

ஒரு நாளில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் அல்லது 39 டிகிரி செல்சியசை எட்டிய நிலையில் வானிலை ஆய்வாளர்கள் அவசரகால எச்சரிக்கையை வெளியிடுவர்.

“அவசரகால வெப்ப அலை எச்சரிக்கை என்பது வெப்பம் அதிகமாக உள்ளது என்பதற்கானது மட்டுமல்ல. ஆரோக்கியமாக இருப்பவர்களும் திடீர் என நோய்வாய்ப்படவும் சில நேரங்களில் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது,” என கொரிய வானிலை நிர்வாகத்தின் தலைவர் லீ மீ சியோன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தென்கொரியாவின் வடக்கில் உள்ள கியோங்சாங் மாநிலத்தின் தெற்கு வட்டாரத்தில் இரு நகரங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
தென்கொரியாவானிலைஎச்சரிக்கைவெப்பநிலைவெப்பத் தாக்குதல்வெப்ப அலை