சோல்: பொருள்களை மறுசுழற்சி செய்யும் திட்டங்களுக்கு தென்கொரியா அனைத்துலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதன் பயனாக அந்நாடு அனைத்துலக கழிவுப் பொருள்களை எவ்வாறு கையாளலாம் என்ற இணக்கத்தை எட்ட அது அனைத்துலக நாடுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க உள்ளது. இந்நிலையில்தான் அந்நாடு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஒரு எல்லை உண்டு என வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
‘ஐஎன்சி-5’ (INC-5’) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் பேச்சுவார்த்தை சந்திப்பு தென்கொரியாவின் பூசான் நகரில் அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. அதில் முதல் கட்டமாக, ஐநா அமைப்பு ஒப்பந்தம் மூலம் நாடுகளின் பிளாஸ்டிக் தயாரிப்புக்கு ஒரு வரையறை வகுக்கலாமா என்பதில் கவனம் செலுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன பெருமளவில் பிளாஸ்டிக், எரிசக்தி ரசாயனப் பொருள்களைத் தயாரிக்கும் நாடுகளான சவூதி அரேபியா, சீனா போன்றவை. இதற்கு முன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அவை அதிக சர்ச்சையில்லாத அம்சங்களான பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வாதிட்டன.
அமெரிக்கா ஐந்திலிருந்து ஆறு விழுக்காடு பிளாஸ்டிக் கழிவுகளையே மறுசுழற்சி செய்யும் நிலையில், தான் 73 விழுக்காடு பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி செய்வதாக தென்கொரியா கூறுகிறது. இதனால் தென்கொரியா கழிவு நிர்வாகத்தில் செயல்படும் பாங்கு மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
‘எம்ஐடி டெக்னாலஜி ரிவியூ’ என்ற மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம், மாதம் இருமுறை வெளியிடும் சஞ்சிகை தென்கொரியா உலகில் மறுசுழற்சி செய்யும் நாடுகளில் மிகச் சிறந்தவற்றுள் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அந்நாட்டின் மறுசுழற்சி விகிதம் முழுமையானதல்ல என்று கழிவு நிர்வாகத் துறையினரும் சுற்றுப்புற ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
மறுசுழற்சி செய்யும் இடங்களில் வரும் பிளாஸ்டிக் கழிவுகளை மட்டுமே தென்கொரியா கணக்கில் கொள்வதால் 73% அளவு பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பது தவறான கணக்கு என அவர்கள் விளக்குகின்றனர். அந்த பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றனவா, அவை எரியூட்டப்படுகின்றனவா இல்லை புதைகுழியில் போடப்[Ϟ]படுகின்றனவா என்பது நமக்குத் தெரிவதில்லை என்று பருவநிலை மாற்ற நிலையத்தின் ஆய்வாளரும் உள்ளூர் ஆர்வலர் குழுவைச் சேர்ந்தவருமாகிய கியோ ஹீ-வோன் என்பவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
இதன் தொடர்பில் ‘கிரீன்பீஸ்’ எனப்படும் பசுமை அமைப்பு தென்கொரியாவின் மொத்த பிளாஸ்டிக் கழிவுகளில் 27% கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாகக் கூறுகிறது.