சுமத்ராவிலிருந்து வரும் புகையால் தெற்கு ஜோகூரில் புகைமூட்டம்

சுமத்ராவிலிருந்து வரும் புகையால் தெற்கு ஜோகூரில் புகைமூட்டம்

படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Sep 2026 - 7:05 pm

1 mins read

ஜோகூர் பாரு: சுமத்ராவிலிருந்து வரும் புகை, தெற்கு ஜோகூரைப் பாதிக்கும் புகைமூட்டத்திற்குக் காரணமாகிறது என்றும் தற்போது நிலவும் தென்மேற்குப் பருவக்காற்று அந்தப் புகையை மலேசியாவை நோக்கிக் கொண்டு செல்கிறது என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமது ஹிஷாம் முகமது அனிப் கூறுகையில், தென்மேற்குப் பருவக்காற்று மலேசியாவில் நீடிப்பதால், சுமத்ரா, கலிமந்தானில் ஏற்படும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை மலேசியாவை நோக்கிக் கொண்டு செல்லப்படுகிறது என்றார்.

“எங்கள் பகுப்பாய்வின் அடிப்படையில், தெற்கு ஜோகூரில் உள்ள புகைமூட்டம் சுமத்ராவிலிருந்து வருகிறது,” என்று அவர் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

அக்டோபர் மாத நடுப்பகுதிக்குப் பிறகு வடகிழக்குப் பருவக்காற்று தொடங்குவதால், தென்மேற்குப் பருவக்காற்று திசை மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது இந்தோனீசியாவிலிருந்து வரும் புகை மலேசியாவை நோக்கிக் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் என்றும் அவர் கூறினார்.

தெற்கு சுமத்ராவில் உள்ள வெப்பப் பகுதிகள் தொகுப்புகளிலிருந்து மிதமானது முதல் அடர்த்தியான புகை மண்டலங்கள் வெளியேறுவது கண்டறியப்பட்டதாகவும், அப்பகுதியிலிருந்து கிளம்பிய புகைமூட்டம் சிங்கப்பூர், தீபகற்ப மலேசியா ஆகியவற்றின் தெற்குப் பகுதியை நோக்கி நகர்வது உணரப்பட்டதாகவும் ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
வானிலைமலேசியாஆசியான்சிங்கப்பூர்புகைமூட்டம்