இந்தியாவில் பிறந்து இங்கிலாந்தில் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த செல்வந்தர் ஸ்ரீசந்த் ஹிந்துஜா மே 17ஆம் தேதி காலமானார்.
அவருக்கு 87 வயது.
இங்கிலாந்தில் அதிக செல்வாக்கும் செல்வமும் உள்ள குடும்பங்களில் ஹிந்துஜா குடும்பமும் ஒன்று.
ஹிந்துஜா மறதிநோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் சரியில்லாமல் இருந்தார்.
வங்கி, மென்பொருள், வேதிப்பொருள், வாகனம் என பலதுறைகளில் ஹிந்துஜா தொழில் செய்துவந்தார்.
2022ஆம் ஆண்டு சண்டே டைம்ஸ் வெளியிட்ட இங்கிலாந்து பணக்காரர்கள் பட்டியலில் ஹிந்துஜாவும் அவரது சகோதரர் கோபிசந்தும் முதலிடத்தில் வந்தனர். இருவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 49 பில்லியன் வெள்ளி.
முப்பதுக்கும் அதிகமான நாடுகளில் செயல்படும் ஹிந்துஜா குழுமத்தில் 200,000க்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.